🇱🇰 English | සිංහල | தமிழ் — Call Us: +(94)112655653 / +(94)777655396 - E-mail

அமைதி அரும்பொருள் காட்சிசாலை

விஸ்வ நிகேதன் சர்வதேச சமாதான நிலையத்தின் ஸ்தாபகரும் சர்வோதய இயக்கத்தின் தலைவருமான கலாநிதி ஏ.ரீ. ஆரியரத்ன அவர்கள் தனது வாழ்நாள் முழுதும் அகிம்சை வழியில் சர்வோதய மூலம் புதியதொரு சமூகக் கட்டமைப்பை உருவாக்க மேற்கொண்ட முயற்சிகளின் பதிவுகள் அமைதி அரும்பொருள் காட்சிசாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அமைதி அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களைப் பார்க்கும்போது, ஆரியரத்ன அவர்கள் எப்படி அனைவர் மத்தியிலும் பிரபல்யமானதொரு நபராக மாறினார் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளலாம். பல பல்கலைக்கழகங்கள் அவருக்கு வழங்கிய கெளரவப் பட்டங்களும், கிராமப்புற சமூகங்களின் பாராட்டுச் சான்றுகளும் அருங்காட்சியகத்தில் அருகருகே காணப்படுகின்றன.

அவர் பெற்ற சர்வதேச விருதுகள்:

  • சமுதாய தலைமைத்துவத்திற்காக பிலிப்பைன்ஸில் இருந்து கிடைத்த மெக்சேசே விருது.
  • பெல்ஜியத்தின் அரசர் பௌடோயினால் வழங்கப்பட்ட கிங் பௌடோயின் விருது.
  • ஜப்பானில் உள்ள நிவானோ அறக்கட்டளையால் வழங்கப்பட்ட நிவானோ அமைதிப் பரிசு.
  • இந்திய அரசால் வழங்கப்பட்ட மகாத்மா காந்தி அமைதிப் பரிசு.
  • உலக பசி விருது.
  • ஜம்னாலால் பஜாஜ் விருது.

உள்ளூர் விருதுகளில்:

  • ‘தேசபந்து’ – இலங்கையின் முன்னாள் சனாதிபதி அதிமேதகு ஜே.ஆர் ஜயவர்தனவினால் வழங்கப்பட்டது.
  • பிரஸாதினி’ – இலங்கையின் முன்னாள் பிரதமர் கௌரவ திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் வழங்கப்பட்டது.
  • ‘ஸ்ரீ லங்காபிமான்ய’ – இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி அதிமேதகு மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட

சர்வோதயா சிரமதான சங்கங்கள் மற்றும் பிற அமைப்புகளால் வழங்கப்பட்ட பல நினைவுச் சின்னங்களுடன் பல்வேறு நிறுவனங்களினால் வழங்கப்பட்ட பல விருதுகளும் ரேமன் மெக்சேசே மன்றம் வழங்கிய காட்சிப் பெட்டிகளில் காணப்படுகின்றன.

இந்த அருங்காட்சியகத்திற்குள் நுழையும் போது, ஏழைகள் மற்றும் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களுக்காக அயராது உழைத்த ஒரு மனிதனின் உன்னதப் பணியை கவனிக்கத் தவறும் எவரும் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

Back to Top