🇱🇰 English | සිංහල | தமிழ் — Call Us: +(94)112655653 / +(94)777655396 - E-mail

ஏ.ரீ ஆரியரத்ன அறக்கட்டளை நிதியம்

ஏ.ரீஆரியரத்ன அறக்கட்டளையானது 1994 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி இலங்கையின் சர்வோதய சிரமதான இயக்கத்தின் ஸ்தாபகரான கலாநிதி ஏ.ரீ ஆரியரத்ன அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டதுடன் இதற்கான நிதியம் மதத்தின் அடிப்படையில் பரிவு மற்றும் அகிம்சையின் நடைமுறையை வெளிப்படுத்துகின்றமைக்காக கலாநிதி ஏ.ரீ ஆரியரத்ன அவர்களுக்கு யப்பான் நாட்டின் நிவானோ சமாதான பரிசு வழங்கப்பட்டபோது வழங்கப்பட்ட முழுப் பரிசுப் பணத்தையும் கொண்டு நிறுவப்பட்டது.

இந்த நிலையம் ஆரம்பிக்கப்பட்டது முதற்கொண்டே வெளிவாரியான நிதியின் மீது தங்கியிருக்காமல் தனது சுய நிதியில் தங்கியிருக்க வேண்டுமென்றே கலாநிதி ஆரியரத்ன அவர்கள் எண்ணம் கொண்டிருந்தார். காந்தி அமைதிப் பரிசின் மூலம் கிடைத்த பணத்தொகை மேற்படி அறக்கட்டளை மூலதனத்தின் மொத்த நிதித் தொகையாக அமைந்ததுடன் அறக்கட்டளைப் பத்திரத்தின் பி்ரகாரம் மூலதனம் பயன்படுத்தப்படக் கூடாது என்பதுடன் வட்டியில் 75% மட்டுமே அறக்கட்டளையின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்தப்படுதல் வேண்டும். வட்டித்தொகையில் மீதமுள்ள 25% வட்டியானது மூலதனத்திற்கு வரவு வைக்கப்படுதல் வேண்டும். 2007 ஆம் ஆண்டில், கலாநிதி ஏ.ரீ ஆரியரத்னவின் நீண்டகால நண்பரான திரு ஸ்டீவ் நேஷன்ஸ் அவர்கள் கலாநிதி ஏ.ரீ ஆரியரத்ன அவர்கள் தொடர்பாகவும் அவரது பணி தொடர்பாகவும் பெரும் அபிமானியாக இருந்த அவரது மறைந்த மனைவி திருமதி ஜான் நேஷன்ஸின் நினைவாக வழங்கப்பட்ட நன்கொடையின் மூலம் அறக்கட்டளை நிதியத்தின் மூலதனம் அதிகரிக்கப்பட்டது.

Back to Top