🇱🇰 English | සිංහල | தமிழ் — Call Us: +(94)112655653 / +(94)777655396 - E-mail

āyubōvan Vishva Niketan was established close to Sarvodaya Headquarters and was meant to
give a spiritual impetus to those who are working with Sarvodaya.
Vishva Niketan Healing the mind, Healing society and Healing the environment Kutis Our four buildings known as ‘Metta’ (Loving Kindness), ‘Karuna’ (Compassion),
‘Muditha’ (Altruistic joy), and ‘Upekkha’ (Equanimity).
Vision A place dedicated to spiritual awakening, Vishva Niketan welcomes anyone
who wishes for the well being of all sentient beings.
அமைதித் தோட்டம் மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது – மணல் தோட்டம், நீர் தோட்டம் மற்றும் தியானத் தோட்டம்.

அமைதிப் பூங்கா

நிலையத்தின் தளவமைப்பு மற்றும் நிறைவேற்றம் ஆகியவை மனதைத் தூய்மைப்படுத்துவதற்கு உகந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அழகியல் மற்றும் நடைமுறை பயன்பாடு ஆகிய அனைத்து விவரங்களுக்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அமைதித் தோட்டம் மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது – மணல் தோட்டம், நீர் தோட்டம் மற்றும் தியானத் தோட்டம்.

மணல் தோட்டம்

அமைதி நிலையத்தின் நுழைவாயில் மணல் தோட்டம் வழியாக உள்ளதுடன் இந்நுழைவாயில் மணல் மற்றும் கபொக் ஆகியவற்றால் கட்டப்பட்டுள்ளது. இந்த கடினமான மேற்பரப்பானது தியானத்திற்கு வருபவர்களுக்கு பொதுவாக மனிதர்களின் மனதில் இருக்கும் வெறுப்பு, பேராசை, அறியாமை, பொறாமை போன்ற ஆரோக்கியமற்ற எண்ணங்களை நினைவூட்டுவதாக அமைகின்றது.

தண்ணீர் தோட்டம்

அருகிலுள்ள நீர் தோட்டம் பூக்கும் தாமரை செடிகளைக் கொண்ட மூன்று வளைந்த குளங்களைக் கொண்டுள்ளதுடன் அதன் பின்னால் மனிதனால் உருவாக்கப்பட்ட சிறிய குன்றுகளிலிருந்து கீழே பாயும் சிறிய நீர்வீழ்ச்சிகள் உள்ளன. சமாதி மண்டபத்திற்கான பாதை, முக்கிய தியான மண்டபம் ஆகியவை கவனம் செலுத்தும் சிந்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு கவனத்துடன் நடந்துசெல்வதை தேவைப்படுத்தும் வகையில் தண்ணீரில் உயர்த்தியமைக்கப்பட்ட கற்களினாலான ‘ஜாக்கிரதையின் பாலத்திற்கு’ மேலே அமைக்கப்பட்டுள்ளன.

தியான பூங்கா

தளத்தின் வீடுகளுக்கு வடக்கே உள்ள அடர்ந்த காடு போன்ற மூலையில் போதி மரம், சமாதி நிலையில் உள்ள புத்தர் சிலை (பத்மாசனம்) மற்றும் நடைபயிற்சி தியானத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சரளைக் கற்களினலான பாதைகள் அடங்கிய தியானத் தோட்டம் உள்ளது. அநுராதபுரத்திலுள்ள அரச மரத்திலிருந்து பெறப்பட்ட அரச மரக்கிளையின் ஒரு மரக்கன்று இங்கு நாட்டப்பட்டுள்ளது. புத்தர் சிலையை எதிர்கொள்ளும் அழகான தளம், தியானத்திற்காக வருகை தருபவர்களுக்கு அமைதி, சாந்தம் மற்றும் சமநிலையை அனுபவிக்க நடை தியானம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது. போதி மரத்தின் வெளிப்புற வட்டத்தில் அமைந்துள்ள திருச்சின்ன அறையில் புத்தரின் திருச்சின்னங்கள் வைக்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் காத்மாண்டுவின் மேயர் திரு பி.எல் சிங், அவர்களால் பரிசளிக்கப்பட்ட இரண்டடி தூய வெண்கல புத்தர் சிலை தியானத்திற்கு வருகைதருபவர்களின் தரிசனத்திற்காக திருச்சின்ன அறையில் வைக்கப்பட்டுள்ளது.


வசதிகள்



கூடங்கள்

அமைதி நிலையத்தில் ‘மெத்தா’ (அன்பான கருணை), ‘கருணா’ (பரிவு), ‘முதிதா’ (பரோபகார இன்பம்) மற்றும் ‘உபேக்கா’ (உள்ளச் சமநிலை) என அழைக்கப்படும் நான்கு கட்டடிடங்களில் 14 கூடங்கள் (இணைக்கப்பட்ட கழிவறைகளுடன் கூடிய தங்கும் விடுதிகள்) உள்ளன. இவற்றில் 20 விருந்தினர்கள் தங்குவதற்கான வசதிகள் உள்ளன. மெத்தா மற்றும் கருணா மடங்களின் முன்தோற்றம் நீர் தோட்டத்தை எதிர்நோக்கியவாறு உள்ளது. கூடங்களில் உள்ள அறைகள், நடைபயிற்சி மற்றும் அமர்ந்து தியானம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு வராந்தாவுடன் கூடியதாக ஒரு முற்றத்திற்கு திறக்கப்படுகின்றன.

தங்கும் விடுதிகள்

தங்குமிட விடுதி பாணியில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தில் 30 விருந்தினர்கள் தங்கலாம்.

Back to Top