விஸ்வ நிகேதன் அமைதிக்கான ஒரு நிலையமாகும். அனைத்து சமூகங்களுக்கும் உள்வாரியான மற்றும் வெளிவாரியான அமைதியின் உயரிய குறிக்கோளை அடைந்துகொள்வதற்கான ஒரு தளமாக இந்நிலையம் திகழ்கின்றது. தனிநபர்கள் தங்களுக்குள்ளே தோன்றும் மோதலை நிறுத்தி உள் அமைதியை அடையும் போது மட்டுமே நிலையான அமைதியை அடைய முடியும் எனும் உறுதியான நம்பிக்கையில் இந்நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இயற்கைக்கு நெருக்கமான அமைதி மற்றும் சாந்தம் நிறைந்ததொரு சூழலை உருவாக்கும் விடயத்தில் ஆக்கபூர்வமான மாற்றத்தை உருவாக்குவதற்கு அப்பால் உள்ள உலகத்திற்குத் திரும்புவதற்கு மக்களை அவர்களின் உள் ஆன்மீகத்தினை நோக்கி எழுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
விஷ்வ நிகேதனின் அமைதியைப் பற்றிய தனித்துவமான செய்தியானது மனிதனின் மனதைக் குணப்படுத்துதல், சமுதாயத்தைக் குணப்படுத்துதல் மற்றும் சூழலை குணப்படுத்துதல் ஆகியவற்றிற்கான அதன் பணி மிகச்சுருக்கமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தனிநபர் என்ற ரீதியில் எமக்குள்ளே நாம் ஒரு மாற்றத்திற்கு உட்படாத வரை, எந்தவொரு சமூக மாற்றத்திற்கும் பங்களிப்பினை செய்ய இயலாது. எனவே, நாம் ஒவ்வொருவரும் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல், அதனை மிகைப்படுத்தாமல், தியானத் திறனைப் படிப்படியாக வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியமானதாகும். “சமாதி” என அழைக்கப்படும் நம் மனதை முழுவதுமாக ஒருமுகப்படுத்த முடியும் என்று நாம் உணரும் நிலைக்கு வந்தவுடன், நம் குடும்பத்திலும், சமூகத்திலும், நம் குழுக்களிலும் உள்ள மற்றவர்களை ஒன்றிணைத்து, கூட்டான தியானத்தை ஏற்படுத்திக் கொள்ள இயலுமாயின் ஆன்மீக ஆற்றலைப் பயன்படுத்தி சமூக சிகிச்சையைப் பயிற்சி செய்யக்கூடிய ஒரு வகையான மன சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள முடியும் என நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, தனிநபர்கள் தன்னிடம் இருந்து இதனை தொடங்க வேண்டும் என்பதுடன் அதனையடுத்து சமூகத்தில் அடியெடுத்து வைக்கும் போது அவர்களுக்கு மற்றவர்களுடன் தியானத்தில் ஈடுபட முடியும். விஸ்வ நிகேதனில் இருப்பதைப் போன்று ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு செடியும், ஒவ்வொரு நீர் நிலையும், தியானம் செய்வதற்கும் தியானம் செய்பவர்களுக்கும் ஏற்ற இயற்கையானதொரு சூழல் உங்களுக்கு உள்ளபோது இத்தகைய தனிப்பட்ட மற்றும் கூட்டு தியான அனுபவத்தை உங்களுக்கு மேம்படுத்திக்கொள்ள முடியும். எனவே, தொலைதூரக் காடுகளுக்குள் சென்று தியானத்தில் ஈடுவதைப் பார்க்கிலும், தனிமனித, கூட்டு மற்றும் இயற்கை பரிமாணங்கள் ஒன்றிணைந்து, அமைதியான மனிதனை, அமைதியான சமுதாயத்தை, அமைதியான சூழலை பேணி வளர்க்கும் விஷ்வ நிகேதனுக்கு வருகை தந்து இந்த இலக்கினை அடைந்துகொள்ள இயலும்.