🇱🇰 English | සිංහල | தமிழ் — Call Us: +(94)112655653 / +(94)777655396 - E-mail

நிலையம்

தொலைநோக்கு மற்றும் குறிக்கோள்கள்

 • இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள மனிதகுலத்தின் ஆன்மீக மறுமலர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில், விஷ்வ நிகேதன் அனைத்து உயிர்கள் மீதும் அன்பிரக்கம் செலுத்தும் உணர்வினை அடிப்படையாகக் கொண்ட புத்தரின் உலகளாவிய போதனைகளை கற்றல், கற்பித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்குதல்.
 • மதங்களுக்கிடையிலான, இனங்களுக்கிடையிலான, சமுதாயங்களுக்கிடையிலான, அரசியல் மற்றும் நாடுகளுக்கிடையிலான புரிதலை மேம்படுத்துதல்.
 • அமைதியைக் கட்டியெழுப்புதல், நெருக்கடிகளில் தலையீடு செய்தல் மற்றும் வன்முறையற்ற பிணக்கு தீர்வு தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகளில் அமைதிப் படைகளைப் பயிற்றுவித்தல்.
 • உலகின் ஒவ்வொரு சமுதாயத்திலும் அமைதி மற்றும் நீதியின் அடிப்படைத் தளமாக மனித உரிமைகளை ஊக்குவிப்பதன் மூலம் அதனை உறுதிப்படுத்துதல். இது மதங்களுக்கிடையிலான, இனங்களுக்கிடையிலான, சமுதாயங்களுக்கிடையிலான, அரசியல் மற்றும் நாடுகளுக்கு இடையேயான புரிதலை மேம்படுத்தும்.
 • சமுதாயங்கள் மற்றும் மதப் பிரிவுகளுக்கு இடையே பரஸ்பர புரிதல் மற்றும் நட்புறவை ஊக்குவிக்கும் செயல்களுக்கு அனுசரணை வழங்குதல்.
 • ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நாட்டில் அல்லது நாடுகளுக்கிடையில் அல்லது சமுதாயங்களுக்குள் எழும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு நடுநிலையான தளத்தை வழங்குதல்.

விழுமியங்கள்

உண்மை
காலாம சூத்திரத்தில் புத்தர் ‘இதை நான் சொல்வதாலோ, என் ஆசிரியர் சொன்னதாலோ அல்லது பாடப்புத்தகத்தில் உள்ளதாலோ இதை ஏற்க வேண்டாம்’ என்று கூறியுள்ளார். இது தான் சரியானது என்று உங்கள் மனம் சொல்லாதவரை எதையும் நம்பாதீர்கள். மிக முக்கியமான விடயம் யாதெனில், ஒருவரின் சொந்த முயற்சியால் உண்மையைத் தேடுவதாகும். உண்மையைத் தேடுதல் ஒவ்வொரு மனிதனும் பின்பற்ற வேண்டிய ஒரு கொள்கையாக இருத்தல் வேண்டும்.
அஹிம்சை
உண்மை அஹிம்சையுடன் நெருங்கிய தொடர்புடையது. காலை முதல் மாலை வரை, நாள் முழுவதும், பிறர் மீது வன்முறையைக் கொண்டுவரும் எந்த எண்ணமும் உங்களுக்கு இருக்கக் கூடாது. பிறர் மீது வன்முறையை தோற்றுவிக்கும் ஒரு வார்த்தையைக் கூட பேசாதீர்கள். வேறு விதமாக கூறுவதாயின், நாம் தவிர்க்க வேண்டிய நான்கு வார்த்தைகள் உள்ளன. நாம் உண்மைக்கு மாறாக பேசுதல், புறங்கூறுதல், வீண் பேச்சுகளில் ஈடுபடுதல், அவதூறான அல்லது கடுமையான பேச்சு ஆகியவற்றைத் தவிர்த்தல் வேண்டும். இவையனைத்தும் வன்முறையின் ஒரு பகுதியாகும். அதுபோல எந்த ஒரு உயிருக்கும் தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு செயலிலும் ஈடுபடுதல் கூடாது.
தன் மீது தங்கியிருத்தல் (தற்சார்புடைமை
உண்மையும் அஹிம்சையும் மனிதர்களால் பின்பற்றப்படும்போது ‘நான்’, ‘எனக்கு’ எனும் எண்ணம் மற்றும் ‘அகங்காரம்’ ஆகியவை மெதுவாக மறையத் தொடங்குகின்றன. அகங்காரமின்மை ஒரு கொள்கையாக மாறும்போது, இந்த ‘நான்’ காரணி ஒரு மாயை என்பதை நாம் உணர்வோம். ‘நான்’, ‘எனது’, ‘எனக்கு’ என்ற எண்ணத்தினை நினைத்து ஏமாந்துவிடக் கூடாது.
உண்மை, அகிம்சை, சுயமறுப்பு என்ற இந்த மூன்று கொள்கைகளையும் நாம் கடைப்பிடிக்க முடிந்தால், நம் கலாச்சாரத்தில் நாம் கற்றுக்கொண்ட பல கொள்கைகளை இந்த மூன்று தலைப்புகளின் கீழ் உள்ளடக்க முடியும். உதாரணமாக:
ஆட்சியாளர்களின் 10 கடமைகள்
தான:தாராள மனப்பான்மை, சீல: ஒழுக்கம், படிச்சக: தியாகங்கள், அஜ்ஜவ: நேர்மை மற்றும் நாணயம், மத்தவ: இரக்கம் அல்லது மென்மை, தப: புலன்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பழக்கவழக்கங்களில் எளிமை, அக்கோத:வெறுப்பின்மை, அவிஹிம்ச:அஹிம்சை:, காந்தி: பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை, அவிரோத: எதிர்ப்பு மற்றும் பகைமை இல்லாமை.
பத்து பரிபூரணங்கள்:
தானத்தில் முழுமை (தான பாரமி) – ஒழுக்கத்தில் முழுமை (சீல பாரமி) – துறப்பதில் முழுமை (நெக்கம்ம பாரமி) – ஞானத்தில் முழுமை (பண்ண பாரமி)- முயற்சியில் முழுமை (வீரிய பாரமி) – சகிப்புத்தன்மையில் முழுமை (காந்தி பாரமி) -தீர்மானத்தில் முழுமை (அதிட்டான பாரமி) – தீர்மானத்தில் முழுமை – (அதிட்டான பாரமி) – அன்புமிக்க கருணையின் முழுமை (மெத்தா பாரமி) -உள்ளச் சமநிலையில் முழுமை (உபேக்கா பரமி) –
நான்கு உன்னத இருப்பிடங்கள்:
அன்புமிக்க கருணை – பரிவு – பிறருக்குகென வாழ்வதில் இன்பம் – உள்ளச் சமநிலை
உலகை நடத்துவதற்கான நான்கு வழிகள்:
தாராள மனப்பான்மை – இனிமையான பேச்சு – அர்த்தமுள்ள வாழ்வாதாரம் – சமத்துவம்
ஜாக்கிரதையின் நான்கு சிந்தனைகள்:
உடல் – உணர்வுகள் – மன நிலைகள் –புலனால் உணரக்கூடிய நிகழ்வுகள் ஆகியவற்றைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்.

நடத்தை நெறிமுகைள்

விஸ்வ நிக்கேனதில் இருக்கும் போது நாம்,

 • உன்னதமான மௌனத்தைக் கடைப்பிடிப்போம்.
 • ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் எடுத்து வைப்போம்.
 • ஒவ்வொரு வார்த்தையையும் நன்கறிந்து பேசுவோம்
 • ஒவ்வொரு எண்ணத்தையும் ஜாக்கிரதையாக பார்ப்பதற்கு கற்றுக்கொள்வோம்
 • கட்டிடங்கள் மற்றும் வளாகங்களை சுத்தமாக வைத்திருப்போம். சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்போம.
 • தாவரங்களை உயிருள்ளவைகளாக நினைத்து பராமரிப்போம்./li>
 • புகைபிடித்தல், மது மற்றும் அசைவ உணவு உட்கொள்வதை தவிர்த்துக்கொள்வோம்.

நாம்

 • விஸ்வ நிகேதன் வளாகத்தில் எந்த வடிவத்திலான ஆயுதங்களையும் எடுக்காதிருப்போம்.
 • தண்ணீர் மற்றும் மின்சாரத்தை தகுந்த அக்கறையுடன் பயன்படுத்துவோம். இதன் மூலம் விரயத்தை தவிர்ப்போம்.
 • வெள்ளை ஆடை அணிவோம்.
 • வெறுங்காலுடன் இருப்போம்.
 • அறைகள் மற்றும் கழிப்பறைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருப்போம் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்குப் பிறகு உணவு பாத்திரங்கள் மற்றும் முள்கரண்டி போன்றவற்றை கழுவுவோம்.
 • சுற்றுப்புறங்களை சுத்தமாக பராமரிப்போம்.
Back to Top