விஸ்வ நிகேதன் அமைதி மற்றும் தியான நிலையம், புத்தரின் தர்மத்தில் பொதிந்துள்ள ஞானத்தைக் கொண்டு நமது அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் மோதல்களை கையாள வழிகாட்டும் தூய நோக்கத்துடன் பொதுமக்களுக்கு மாதாந்த தம்ம சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்கிறது. சக்திவாய்ந்த பிரசங்கங்களை வழங்குவதில் நன்கு அறியப்பட்ட நாட்டிலுள்ள பிரபல பௌத்த பேச்சாளர்கள் இந்த அமர்வுகளுக்கு எப்போதும் அழைக்கப்படுகிறார்கள்.
இந்த பிரசங்கங்கள் பதிவு செய்யப்படுவதுடன் பொதுமக்களுக்கு கேட்பதற்காக கிடைக்கச்செய்யப்படுகின்றன. பொதுவாக 1-1/2 மணிநேரம் நடைபெறும் இந்த அமர்வுகளில் பங்கேற்க ஒத்த எண்ணம் கொண்ட அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். தம்ம பிரசங்கத்திற்கு பின்னர் சிற்றுண்டிகளும் வழங்கப்படுகின்றன. மேலும் ஆர்வமுள்ள எந்தவொரு தரப்பினரும் அமர்வுகளுக்கு அல்லது சிற்றுண்டிகளுக்கு அவர்களின் பிறந்தநாள், திருமண நாள், இறப்பு நாள் அல்லது உங்கள் விருப்புத் தெரிவுகளின் படி பிற நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு அனுசரணை வழங்க முடியும். மேலதிக தகவல்களுக்கு விஸ்வ நிகேதன் ஊழியர்களை தொடர்பு கொள்ளவும்.